அருட்சகோதரர் ஜேம்ஸ் கிம்ப்டன் அவர்களுக்கான இந்த புத்தகத்தின் முதல் அர்ப்பணமானது தற்போது நம் பராமரிப்பில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளின் சார்பாக ஒன்று இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அன்னால் மேரியால் வரையப்பட்ட இந்த ஓவியத்தை நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அக்குழந்தை எழுதுகிறாள், “அடைக்கலம் கேட்டு நாங்கள் உம்மிடம் தஞ்சம் புகுந்தோம்… அன்பு என்ற ஒற்றை வார்த்தையில் நீவீர் எங்கள் நெஞ்சம் புகுந்தாய்!!! We wanted the first dedication in this book for Brother James to be on behalf of all the children currently in our care. We have chosen this drawing by Annal Mary, who writes, "We came to you searching for a refuge, you sieged us with your sole love."
Poems from RTU children கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் எனக்கு தாத்தாவாக நூறு சாமிகள் இருந்தாலும் தாத்தா உன்னைப்போல் இருந்திருக்குமா கோடிகோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா – யாதவன் God's gift, I didn't receive, God gifted himself, it was you. Amidst of many gods, you stand tall. Your love has no equivalence. Yathavan தந்தையில்லாத எனக்கு நல் தந்தையாய் அனுதினமும் அன்பு காட்டினார் என் தாத்தா நல்வழியில் நான் நடக்க அவர் வழியை எனக்குக் காட்டினார் இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் அவரைக் கண்டேன் நான் போகும் பாதையை அறிந்தவர் என் தாத்தா அவர் பெயரை நிலை நாட்ட உழைத்திடுவேன் என்றும் அவர் வழியில் - சுவாதி For the parent-less, you are the parent, For the loveless, you are love, For those who have nothing, you are everything, For the unknown path, you are the footsteps. Swathi கடவுளின் முகம் காண ஆசை தாத்தாவின் முகமாய் வந்தாயே என் அன்னையின் அன்பை தந்தாயே என் தந்தையின் அரவணைப்பை தந்தாயே என் வாழ்வின் மறு உருவாய் வந்தாயே எங்கள் தாத்தாவே – கீர்த்தனா I want to see God's face, it was your face, I want to know my mother's love, it was your love, You are the incarnation of everything to me. Keerthana என் சின்ன விழிகளில் பூத்த கண்ணீர் பூக்களைப் பார்த்து வாரி அணைத்து, உச்சி முகர்ந்து, இதமாய் வருடி, உள்ளங்கையில் முகம் தாங்கி, இதோ இருக்கிறேன் உன் தாய் என்று அமைதியாய் சிரித்து, என் சிறகுகளுக்கு வலுத்தந்த அன்னையாம்! எங்கள் தாத்தா! - சுசி You saw my tears, only to embrace me, Your hands held mine tight, You became my mother, only to strengthen my wings. Susi தேவைக்காக வாழும் பூமியில் சேவைக்காக வாழ்ந்த புனிதர் சகோதரர் ஜேம்ஸ் கிம்ப்டன் - தனுஸ்கா People live for their need, you lived for our need. Dhanuska முதியோர்களுக்குப் பசியைப் போக்கும் என் அன்புத் தாத்தா குழந்தைகளின் சிரிப்பில் பொங்கி வழியும் தாத்தா - நித்யா Your cup of joy overflowed, in our smile. Nithya பெண்களும் குழந்தைகளும் முன்னேறுவதே உமது நோக்கம் அதனைக் காணும் போது தெரிகிறது உமது அன்பின் தாக்கம் – திலகவதி Children and women empowerment was your goal, Your love shows it all. Thilagavaathi கல்லுப்பட்டி தரிசுக்குக் கிடைத்த இங்கிலாந்து பரிசே பீடுநடையாளரே - மணிகண்டன் In Kallupatti's desert, you are an oasis. Manikandan