Page of

Share this page

Share this page

Share this page

Share this page

Messages from RTU people past and present

  • Dear Friends/Family, I would like to share a contribution page with you which has been created in the $bookTitle$ book. To view the page please click on the following link: $findContributionLink$ Online Book for Brother James Kimpton https://www.theonlinebookcompany.com/OnlineBooks/Kimpton/Contributions/Find/RTUpeoplepastandpres/mrsshanmugalathaassistantdirectorandheadofchildcareatrtu
    https://www.theonlinebookcompany.com/OnlineBooks/Kimpton/Contributions/Find/RTUpeoplepastandpres/mrsshanmugalathaassistantdirectorandheadofchildcareatrtu

    Mrs Shanmuga Latha, Assistant Director and Head of Childcare at RTU

    India | 27 Nov 2017

     

    The first beginnings of my life at RTU was in 1986, when at the age of 19, Brother offered me work as an Office Assistant, due to problems in my family. My knowledge of English was poor, but Brother was very kind enough to train me to write, type and speak in English. I considered this as a great foundation stone for my personal development as well as my future career at RTU in childcare. In my personal life, he helped to build a house for my parents on a loan basis. He was the first person to attend my marriage blessing. Back then, he ran an adoption programme for abandoned babies on behalf of the authorities, and unable to have children, he arranged for me and my husband to adopt a child. On 27th April 2000, he presented a beautiful daughter when she was just 7 days old who he had saved from female infanticide. In May 2000, RTU’s first HIV+ girl child, Swathi, came from Secondrabad. She was neglected by her parents because of HIV. In this situation, he worried and was very compassionate towards this HIV infected child and wanted to give her a good life. Then he planned ahead and prepared us all to accept other HIV+ children and care for them. He exchanged a lot of details about HIV to impart to the foster mothers in the Children's Villages. I saw the real affection he had towards these children. This touched me very much. Though he was a Christian brother, he respected all the religions and attended the local Hindu and Muslim festivals. Seeing my religious look, some public and Government officials were surprised and asked me, “How have you been remaining as a Hindu while you are working under a Christian person? Did not he convert you to become a Christian?”. But I said to them, “Brother is here only for the poor and caring for the children, and not for any religious purposes”. In my experience, we used to receive an orphan baby during Christmas and on his birthday. This and all the children who were brought to us, he considered as a gift of God. I saw Brother James as my guru, father, guide, trainer, teacher, supporter, counsellor, animator and good friend. I am sure I will travel with his spirit until my end. G Shanmugalatha Assistant Director

Add a Message

Previous Next

Messages from RTU people past and present

  • Dear Friends/Family, I would like to share a contribution page with you which has been created in the $bookTitle$ book. To view the page please click on the following link: $findContributionLink$ Online Book for Brother James Kimpton https://www.theonlinebookcompany.com/OnlineBooks/Kimpton/Contributions/Find/RTUpeoplepastandpres/mrsshanmugalathaassistantdirectorandheadofchildcareatrtu1
    https://www.theonlinebookcompany.com/OnlineBooks/Kimpton/Contributions/Find/RTUpeoplepastandpres/mrsshanmugalathaassistantdirectorandheadofchildcareatrtu1

    Mrs Shanmuga Latha, Assistant Director and Head of Childcare at RTU

    India | 27 Nov 2017

     

    நான் எனது 19 வயதில் குடும்பப் பிரச்சினையினால் சொந்த ஊரிலிருந்து வெளியேறி 1986-ம் ஆண்டில் ஆர்.டி.யு நிறுவனத்தில் சகோதரர் அவர்களால் அலுவலக உதவியாளர் பணியில் நியமிக்கப்பட்டேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஆங்கில அறிவு மிக மிகக்குறைவு. சகோதரர் அவர்களது கருணையாலும், பயிற்சியினாலும், ஆங்கிலத்தில் எழுத, தட்டச்சு செய்ய, பேசப் பழகினேன். இதன்மூலம் என் பணியில் சிறப்பாக செயல்படவும், என் வாழ்க்கையை ஆர்.டி.யு வில் தொடரவும், குழந்தைகளின் பணிசெய்யவும் அடித்தளமாக அமைந்துள்ளது. என் சொந்த வாழ்க்கை வளம் பெற, என் பெற்றோருடன் சேர்ந்து வசித்துவர ஒரு வீடு கடன் வசதியில் கட்டித்தந்தார். என் திருமணத்திற்கு முதல் நபராக வந்திருந்து, முன்னின்று ஆசீர்வதித்து நடத்திவைத்தார். அதனைத் தொடர்ந்து சகோதரர் அவர்களால் குழந்தையில்லா தம்பதியினருக்கு ஆர்.டி.யு. மூலம் தத்துக்கொடுக்கும் திட்டத்தின் மூலம் எனக்கும் என் கணவருக்கும் பெண் சிசுக்கொலையிலிருந்து காப்பாற்றப்பட்ட, பிறந்து 7 நாட்களே ஆன என் அழகு மகளை 27 ஏப்ரல் 2000-ம் நாளன்று குழந்தையை அன்புப் பரிசாக வழங்கினார். 2000-வது ஆண்டு மே மாதம் ஆர்.டி.யு.விற்கு ஸ்வாதி என்ற எச்.ஐ.வி. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தை ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து வந்தாள். அக்குழந்தை மீது சகோதரர் அவர்கள் காட்டிய அன்பு, பரிவு மற்றும் அவளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்க வேண்டி அவர் பட்ட கவலை ஸ்வாதியை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு எங்களை முழுமையாக தயார்படுத்திய விதம் வார்த்தையில் சொல்ல முடியவில்லை. எச்.ஐ.வி.நோய் பற்றிய விவரங்கள், விளக்கங்கள் செய்திகளை என்னிடம் எடுத்துக்கூறி, வளர்ப்புத் தாய்மார்களுக்கு பயிற்சியளிக்கவும் அவ்வப்பொழுது சொல்வதும் இப்படியான குழந்தைகளை நிறுவனப்பாராமரிப்பில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு உண்மையான அன்பும் அக்கறையும் அவர் காட்டியவிதம் என்றுமே என்னால் மறக்க முடியாதது. அருட்சகோதரர் அவர்கள் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைத்து மதத்தினரையும் மதிக்கும் பண்பாளர். அவ்வப்பொழுது நடைபெறும் இந்து, முஸ்லீம் விழாக்களில் கலந்து கொள்வார். நான் எப்பொழுதும் இந்துக்கள் அணியும் உடை, திருநீரு பொட்டுடனே தான் இருப்பேன். என்னைப் பார்க்கும் அரசு அதிகாரிகள் மற்றும் இங்கு வந்துபோவோர் சிலர் எப்படி நீங்கள் இத்தனை ஆண்டுகள் கிறித்தவரிடம் பணியாற்றிக்கொண்டு மதம் மாறாமல் இந்துவாகவே இருக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லுவேன் அருட்சகோதரர் அவர்கள் இங்கிருப்பது ஏழை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்வதற்காக மட்டுமே, வேறு எந்தவிதமாகவோ மதம் மாற்றுவதற்காகவோ அவர் இங்கு பணி செய்யவில்லை என்று பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறேன். என் அனுபவத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்திலும் சகோதரர் அவர்களது பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை ஆர்.டி.யு.வில் சேர்க்கப்படும். அப்பொழுதெல்லாம் சகோதரர் அவர்கள் கூறுவார் இந்தக் குழந்தைகள் எல்லாம் கடவுளின் கொடை, கடவுளால் அனுப்பப்பட்டவர்களாகவே நாம் கருதவேண்டும் என்பார். நான் நம் அருட்சகோதரர் அவர்களை எனது குருவாக, தந்தையாக, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, ஆசிரியராக, ஆதரவளிப்பவராக, ஆலோசகராக, நல்லதொரு நண்பராகக் கொண்டிருந்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அவரிடமிருந்து பெற்ற அனைத்து நல்ல பண்புகளுடன் பயணிப்பேன்.

Add a Message

Next Previous